ஒருநாளில் வாழ்க்கை பாடலுக்கு - எனது வரிகள் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 23, 2016

ஒருநாளில் வாழ்க்கை பாடலுக்கு - எனது வரிகள்

ஒரு நாளை போலே இங்கு இன்னொரு நாளும் வருவதில்லை

வருகின்ற காலம் மாற காத்திருந்தால் உபயோகமில்லை
எத்தனை துயரம் கண்டாய்? எதற்கின்று துவண்டு நின்றாய்?
துணிவினை துணையாய் கொண்டால் தோல்வி உனக்கொரு வழி விடுக்கும்

ஓ ஓ ஓ வெறும் காயம் மரணமில்லை துணிந்து எழு
ஓஓஓ வரும் தூக்கம் உடைத்து கொண்டு கனவை தொடு
ஓஓஓஓஓ வீண் கவலை ஏனடா

தோற்றுவிட்டாய் வீழவில்லை ; தோல்வியில்லாமலும் வெற்றியில்லை
தடைகளையே தேடி எடு எதிரிகள் இருப்பின் எதிர்த்து நில்லு
கண்மூடும் காலம் வரையில் கலங்காமல் நீயும் உயரு....
கடலொன்றும் தூரம் இல்லை;
நதிகளும் ஆழம்இல்லை;
தொடர்ந்து நீ நீந்திடும் பொழுது ;
தோல்வி உன்னை தொடுவதில்லை

ஓஓஓ இந்த வாழ்க்கை நிலையில்லை புரிந்துகொள்ளு
ஓஓஓ எந்த நிலையும் நிஜமில்லை தெரிந்துகொள்ளு
ஓஓஓஓஓஓ இன்னும் பயங்கள் தேவையா?

அதுவும் இல்லை இதுவும் இல்லை பாதைகள் எதுவும் எளிதுமில்லை
நேர்மையோடு கஷ்டபடு வெற்றிகள் என்றுமே கடினமில்லை

தடைகளில்லை நீ தகர்க்கும் வரை

தாமரைக்கு நீர் தடையுமில்லை

எண்ணங்களால் நீ உயர்ந்துவிட்டால்

சரிவுகள் என்பது நிகழ்வதில்லை




காத்திட கடவுளில்லை கைதர தோழமையில்லை
உனக்கான வாய்ப்புகளில்லை
தைரியம் போலொரு துணையுமில்லை

ஓஓஓ அட தோல்வி வந்தால் அதை ஏற்றுகொள்ளு
ஓஓஓ இன்னும் வெற்றிபெற அதில் கற்றுகொள்ளு
ஓஓஓஓஓ மின்னும் வெற்றி வேண்டுமா?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages