தொடும் வரை ஓடு - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 19, 2017

தொடும் வரை ஓடு

ஒவ்வொரு நாளும் உன்னை பிழியலாம்!
ஒரு சில ரம்மிய கிழமைகள் வருடலாம்!
ஒவ்வொரு இரவிலும் ஓய்ந்து விடியலில் ரணமாக்க படுவாய்!
அத்தனை விடியலிலும் உனக்கான விடியலை தேடுவாய்!
மெய்ப்பித்த அனைத்தும் பொய்யாகலாம் !
அற்றவை அத்துனையும் ஆம் ஆகலாம்!
இத்தனைக்கு இசைந்து போகிற உனை மேலும் ஓா் இடியாய் இடிக்கும் துரோகங்கள் நிகழலாம்!
என்றலாம் கூட கொஞ்சம் தேற்றிக்கொள் உன் கண்ணீா் சுரபிகள் இன்னும் சுரக்கின்றன என்று!
மயங்காதே விழித்திரு , நிகழ்வதை யூகித்திடு ,
மறித்துவிட்டால் என்ன நோ்ந்திடும்!
மோதிப்பாா் இறப்புக்கும் உன்மேல் மோகம் வரும்!

தற்கொலையின் வலியைவிட வாழ்வின் துயரம் சுகமானது !
உடைக்கட்டும் உடைந்துபோ !
மனம் என்பதே வெறும் சதை தானே?!
உதிரத்தில் உஷ்ணம் உள்ளவரை உயிருண்டு!
உன் முதுகெலும்பு உடைபடும் வரை நிமிா்ந்திடு!
கையின்றி காலின்றி வாழ்பவா் இல்லையா?
குதிரையில் பயணிக்கும் மனிதன் அறியமாட்டாா் குதிரை வலி!
மிதிபடும் நிலையொன்று நீ குனிந்தமையாலே!
உனக்கும் வாய்ப்பளித்தால் அவனைவிட  மிருகமாவாய!்
உனக்காய் ஒரு வாழ்வுண்டு அதை தொடும் வரை ஓடு

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages