சிரியா - வளையற் சிந்து - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 2, 2018

சிரியா - வளையற் சிந்து

சின்னஞ்சிறு மலர்களெம்மை
சில்லுசில்லாய் துளைத்தாரே
இன்னும்பெரும் பாவமெது  செய்யதானே யெம்மையும் வதைத்தாரே புதைத்தாரே கள்ளஞ்செய்ய பறித்தாரே கொன்றாரேதாம் சொல்லும்நீதி உரபை்பீரே?

என்னநீதி சொல்லுவீரோ நீருமெம்மைக் கொல்லுவீரோ பாருமிங்கே பாவமடி பாதையேதோ போனதடி என்றுநீரும் பாடுவீரோ அல்லேல்தாம் ஆதரவு யெனகூறி அடுத்ததை தேடுவீரோ ?

இன்னகதை தோய்வுயென மற்றதொரு -பக்கத்தினில் ஆய்வீர்களோ ஓய்வீர்களோ - துக்கத்தினில்
ஆள்வீர்களோ செய்தியெனச் - சலிப்பினில்
வெறுப்பீரோ உரைப்பீரே களையெனச்
சாய்ந்தோமே களைந்துயாம் - இறப்பினில்

மின்னலிடிக் கஞ்சினமே குண்டுமழைக் கொட்டினாரே
மிஞ்சினவ ரெம்மையே - வெட்டினாரே
துஞ்சுகையில் பிஞ்சிநெஞ்சில் - துளைத்தாரே
விதியென்று போகத்தானே விளையாட்டு எனநீரும் விட்டுவிட்டு
போவீர்களோ வினவினேனே..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages