காளமேகன் போல - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 1, 2018

காளமேகன் போல

மதந்தடுக்கு மோநமருங் காதலை நின்றன்
மதந்தடுக்கு மேயாயின் என்றன் மனமது
மாறும் மதமதும் மாறும் எழிலேயாவும்
மாறுமே காளமேகன் போலவே யானுமே..
(இது நானு எழுதினது )




(முதலிரு அடிகள் காளமேக புலவர். பின்னிரு அடிகள். அடியேன் பவித்ரனே)
நல்லதொரு புதுமை நாட்டில்கண்   டேன்அதனை
சொல்லவா? சொல்லவா? சொல்லவா? - தொல்லை
புதியஇந்தி யாத்தன்னை மோடியுமே பெற்றார்
அதிகப்ப ணத்ததிபர்  கொண்டு..



சட்டியிலே பாதிஅந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் தில்பாதி இட்டுஇருக்க - திட்டமுடன்
வாரிசுருள் வாதிகள் அள்ளிவிட மக்கள்
நாரிநொந்த தென்ன உரை..



முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க
பின்னே இருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேகமது போகுமோ முன்னேறி இத்தேசம்
மாகமாது போகுமோ போ..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages