கவிப்போம் பத்து - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 1, 2018

கவிப்போம் பத்து

சந்தங்கள் ஒன்றிட சொந்தங்கள் ஆகினோம்
பந்தங்கள் செய்திங்கு பந்தங்கள் ஆகினோம்
விந்தைகள் கற்றிங்கு வித்தகர் ஆகினோம்
சிந்தை யதனில் சிறந்து ... 1

சிறந்து பிறந்த மொழியிலே நாமும்
கறந்தநற் பாலொடு தேனாய் வெளியில்
பறந்து விரிந்திட பார்புகழ் கொள்ள
திறந்தவெளி யிதுவும் தெளிவு... 2

தெளிவுற செய்தமே சிந்தை சிறகை
வெளியுற செய்தமே விந்தை கருத்தை
களியுற சொன்னமே அந்தை அறிவை
வளியுற செய்தோம் மகிழ்ந்து. 3

மகிழ்ந்து இசைந்து புனைந்த பலபா
நெகிழ்ந்து உளமது உறைந்த பலாக்கள்
முகிலினில் சேர்ந்து முயங்கினம் யாமும்
பகிரியில் சிந்தினம் சிந்து. 4

சிந்தும் சிறக்கும் புதுக்கவிதை மணக்குமே
முந்து தமிழில் புதுமை பிறக்குமே
சந்த குழிப்புடன் வண்ணப்பா யாவுமே
தந்த கவிப்போம் உயர்வு. 5

உயர்வுள் மனங்கள் உடனிருக்க போதுமே
உயவின்றி இன்பம் உளத்திற் நிறையுமே
தயவுள் மனங்கள் தயாளம் புரிகும்
நயமுள் கவிப்போம் தலை. 6

தலைப்புகள் தந்திங்கு தழைக்கும் கவிஞர்
தலைக்கு மகுடிட்டு கைதட்டும் சுற்றமே
தலைப்பட்டால் தானாய் துணைவரும் கொற்றமே
தலைக்கணம் இல்லா உறவு.. 7

உறவுள் பிழைகளேது உள்ளங்கள் பிணைந்து
திறந்த சிறப்பும் பரந்த உளமும்
வறண்ட தருணத்து ஊற்று யிவையே
அறமென கொண்ட திருத்து .. 8

திருத்தங்கள் செய்கும் திறனோர் பலரே
விருத்தங்கள் செய்ய விழைவோர் தமக்கு
வருத்தங்கள் நீக்கி வகுப்பு வழங்கும்
மருத்துவர் பலரும் உளர்... 9

உளருள் அனைவரும் ஒன்றே உறவே
களமுள் அனைவரும் வேழமே வேந்தே
வளமுள் திறனதில் யாவரும் ஒன்றே
உளமாற இஃதென் முடிபு... 10


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages