வெற்றிக்கு ஒரு ஊக்க மடல் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 4, 2015

வெற்றிக்கு ஒரு ஊக்க மடல்

துணிந்து வா உன் வேர்வைக்கோரு ஒரு
பலனுண்டு துவண்டு போகாதே

தோல்விகள் அது வெற்றிக்கு என்று
வருவது திரும்பி வாராதே



 உன்
செயல் வேகம் அது இன்னும்
உயரட்டும்
 உன்
நெஞ்சில் வீரம் அது
இன்றே இங்கே முளைக்கட்டும்

 தடைகள்
இல்லை நீ முன்னே செல்லும் வேளை


துணிந்து வா தூரங்கள் இல்லை
துரத்தி செல் தடைகளும் இல்லை
துவண்டதால் பயன் ஏதும் இல்லை
தைரியம் போல் ஒரு துணை இல்லை
எழுந்து வா

துன்பம் வருகையில் ஏற்றுகொல் இன்பம்
அது உன்னை விலகாது

 தூண்டும்
துணை அதை கூட்டி செல் வீண்
துயரங்கள் உனக்கெது

 விழிகளில்
ஈரம் கூடாது உழைப்பதில் நேரம்
கிடையாது

யார் சொன்ன போதும்
இயற்கையில் மாற்றம் வாருமோ

எது
வந்த போதும் உனக்கொரு வாய்ப்பு
வாருமே வந்து சேருமே

துணிந்து வா தூரங்கள் இல்லை
துரத்தி செல் தடைகளும் இல்லை
துவண்டதால் பயன் ஏதும் இல்லை
தைரியம் போல் ஒரு துணை இல்லை
எழுந்து வா

உனக்காய் வருவதை ஏற்றுகொல்
உணர்வால் இணைந்தததை ஒப்புக்கொள்

உன்னால் முடிந்ததை முடிவொடு
உலகம் புரிந்திட உணர்த்திடு

நேற்றைய தினங்கள் திரும்பாது
நாளையும் நிலையென கிடையாது

வாழ்க்கை அது ஒரு தரம் வாழனும்
அதில் தினம்

 ஆனாலும் நாளை வரும்
சமுதாயம் உயர்ந்திட உன் பணி
செய்திடு

 துணிந்து வா இனி எதிரிகள்
இங்கே இல்லை தடுக்கவே

திரும்பிடும் உன் திசையினை
மற்றிது தோல்வி ஆகாதே

 உன் எண்ணம்
யாவும் அட இங்கே ஜெய்கட்டும்

உன்
நெஞ்சம் எங்கும் பல இன்பம் பொங்கட்டும்

எல்லைகள் இல்லை நீ
தைரியம் விடும் வரை

எழுந்து வா எதிரிகள் இல்லை
தூரத்தினால் தடைகளே இல்லை
துணிந்து வா தோல்விகள் இல்லை
தைரியம் போல் ஒரு துணை இல்லை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages