தோல்வி வாசி - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 12, 2018

தோல்வி வாசி

கொஞ்சம் நம்பிக்கை முதலீடு செய்தால்
மிஞ்சம் துரோகங்களும் ஏமாற்றங்கும் லாபமாய் கிடைக்கலாம்.
நான் முதலீட்டை இழந்து விட்டேன்...

கொஞ்சம் போலித்தனத்தை நல்முறையில் கற்றிருந்தால்
நிறைய ஏமாலிகளை நண்பரெனும் பணிக்கு அமர்த்தலாம்
நான் கற்பதற்கு வசதியில்லாதவன்..

கொஞ்சம் ஏமாற்றும் மந்திரத்தை வசமாக்கியிருந்தால்
நிறைய பணத்தை அள்ளிவிட்டு இன்பத்தில் மிதக்கலாம்
நான் ஏமாறவே பயின்றிருக்கிறேன்..

கொஞ்சம் கூஜா சலாம் அறிந்திருந்தால்
பெரும் வணிகத்தின் பெரும்பதவியில் லயிக்கலாம்
நான் கூஜாவை பிடிக்க கற்றிருக்கவில்லை.

கொஞ்சம் அறத்தையும் தர்மத்தையும் விட்டொழித்தால்
இன்று
நான் மந்திரியாகவும் ஆகிருக்கலாம்
நான் தர்மத்தை விடவதாயில்லை...

இத்தனைக்கும் இத்தனைக்கும் ஒத்துபோகாத காரணத்தால்
வெற்றி தேவதைநீ குடும்பத்துக்கு லாயக்கில்லை
என்று ஓடிவிட்டாள் அப்போதும் நான்விடவில்லை...

ஆகவே என்னை மதித்து காதலித்து
என் ஆழ்மனதின் சீழ்படிந்த தரையினை
துப்புரவு செய்து என்னிடபாக நல்லாளாய்
இதயத்து இல்லாளாய் இருக்கிறாள் ஒருத்தி..
தோல்வியின் தேவதை. நானும் தோல்வியின் நெஞ்சத்தில் வசிக்கும்.
தோல்வி வாசி....



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages